தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய வினாத்தாள் மாதிரி - 10th model question paper

சென்னை: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய வினாத்தாள் மாதிரியை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

By

Published : Aug 4, 2019, 3:03 PM IST

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் புதிய மாதிரி வினாத்தாள் தயார் செய்யப்பட்டு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அதன் இணைய முகவரியான http://www.tnscert.orgஇல் வெளியிட்டுள்ளது.

இந்த மாதிரி வினாத்தாள்களை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த இணையதள பக்கத்தில் தமிழ் முதல் தாள்-இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள்-இரண்டாம் தாள், கணக்கு, அறிவியல், சமூக அறிவியில் பாடங்களுக்கு வினாத்தாள் மாதிரி வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு மதிப்பெண் வினா, இரண்டு மதிப்பெண் வினா, ஐந்து மதிப்பெண் வினா என பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களின் அறிவுத்திறனை சோதனை செய்யும் வகையில் வினாத்தாள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு ஏற்பவும் வினாத்தாள் வடிமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

அதே நேரத்தில் மாணவரின் அறிவுத்திறனை சோதனை செய்யும் வகையிலும் வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details