சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை, சஞ்சய் காந்தி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(39). இவர் கடந்த 10ஆம் தேதியன்று தனது மனைவியுடன் சொந்த ஊரான திருச்சிக்கு சென்று வீடு திரும்பினார். இந்நிலையில், வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகை, 200 கிராம் வெள்ளி பொருட்கள், 25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு தகவலளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ரேகைகளை பதிவுகளை பதிவு செய்தனர்.