தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.10க்கு மஞ்சப்பை.. தானியங்கி இயந்திரம் அறிமுகம் - 10 ரூபாய் மஞ்சப்பை

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மீண்டும் மஞ்சைப்பை திட்டத்தில் 10 ரூபாய்க்கு மஞ்சைப்பை வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

மீண்டும் மஞ்சைப்பை- பிளாஸ்டிக் இல்லாத வளாகத்திற்கு விருது
மீண்டும் மஞ்சைப்பை- பிளாஸ்டிக் இல்லாத வளாகத்திற்கு விருது

By

Published : Jun 6, 2023, 8:10 AM IST

சென்னை: சென்னையில் உள்ள எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மீண்டும் மஞ்சைப்பை திட்டத்தில் 10 ரூபாய்க்கு மஞ்சைப்பை வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் மஞ்சைப்பை திட்டத்தை செயல்படுத்தி ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்காெண்டு வருகிறது.

இதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரங்களைப் பொருத்தி, அதில் 10 ரூபாய் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் வகையிலும் ஏற்பாடு செய்துள்ளது.

இதையும் படிங்க:“சுற்றுச்சூழலுடன் இணைந்து வாழும் நமது வாழ்க்கை முறையை உலகுக்கு காட்ட வேண்டும்” - ஆளுநர் ஆர்.என்.ரவி

உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று (ஜுன் 5) கடைபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தினத்தின் மையக் கருவாக பிளாஸ்டிக் மாசு ஒழிப்பு என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அளவற்ற மற்றும் தேவையற்ற நெகிழிப் பயன்பாட்டை எதிர்த்து நாம் தொடங்கிய மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும். மக்காத் தன்மையுடைய பிளாஸ்டிக் கழிவுகளை முறையாகப் பிரித்துப் போட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குனர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாாியத்தின் தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் 10 ரூபாய் செலுத்தினால் மஞ்சப்பை வருவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதனை மருத்துவமனைக்கும் வரும் நோயாளிகளின் உறவினர்கள் உள்பட அனைவரும் பயன்படுத்தலாம். இது குறித்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குனர் ரேமா மோகன் கூறுகையில், “மருத்துவமனையின் வளாகத்தில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளோம்.

மேலும், சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மீண்டும் மஞ்சப்பை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. அதில் 10 ரூபாய் தாள், நாணயம், அல்லது 5 ரூபாய்கள் 2 என செலுத்தினால் மஞ்சப்பை வரும். அதனை எடுத்து பயன்படுத்தலாம்.

இதனைத் தொடர்ந்து, இந்த இயந்திரம் தற்போது இயக்குனர் அலுவலகத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது. அதனை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய உள்ளோம். இதன் மூலம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பயன்பாட்டிற்கு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல், சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஒப்பந்த செவிலியர்களுக்கு சமஊதியம் வழங்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை - தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details