தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் திருட்டு மின்சாரம் பயன்படுத்துவதில் தகராறு - 5பேர் கைது; 10பேர் காயம்!

சென்னை: அண்ணாநகர் ரவுண்ட் பில்டிங் பகுதியில் திருட்டு மின்சாரம் எடுப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சென்னை செய்திகள்  மின்சாரத் திருட்டு  மின்சாரத் திருட்டு தகராறு  illegal current connection
சென்னையில் திருட்டு மின்சாரம் பயன்படுத்துவதில் தகராறு

By

Published : Aug 24, 2020, 11:56 PM IST

சென்னை அண்ணாநகர் ரவுண்ட் பில்டிங் அருகேயுள்ள டிவிஎஸ் காலனி 39ஆவது தெருவில் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் முறையான மின்சார இணைப்பு இல்லாததால் அப்பகுதியில் உள்ள சிலர் மின்சாரப் பெட்டியில் இருந்து திருட்டுத் தனமாக மின்சாரம் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. நேற்றிரவு (ஆகஸ்ட் 24) அப்பகுதியில் மின்சாரம் எடுப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பில் முடிந்தது. இதில், இருதரப்பைச் சேர்ந்த 10 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஜெஜெ நகர் காவல்துறையினர் வெங்கடேசன், செல்வம், மணிகண்டன், பரத், வீரா ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ளனர். கடந்த வாரம் மதுபோதையில் அதேபகுதியைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதும், அதில், ஏற்பட்ட பகையின் காரணமாக ஒரு கும்பல் எதிர்தரப்பைச் சேர்ந்த நபர்கள் மீது தாக்குதல் நடத்தியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மின்சார திருட்டு தொடர்பான தகவல்களை காவல்துறையினர் மின்வாரிய அலுவலர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:தோட்டத்தில் கஞ்சா வளர்த்தவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details