சென்னையில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க காவல் துறையினர் தொடர்ந்து குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ஒரே நாளில் 10 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. - சென்னை
சென்னை: பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுவந்த பத்து குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஒரே நாளில் 10 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.
அதன்படி, இன்று கங்காதரன்(24), மோகன்(25), விக்கி(22), சசிகுமார்(23), அருண்ராஜ்(24), முகமது ரஃபிக்(26), மணி(27), சரவணக்குமார்(30), சுரேஷ்(33), வெங்கடேசன் (48) ஆகிய 10 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.மேலும் இவர்கள் மேல் கொலை முயற்சி,வழிப்பறி, அடிதடி உட்பட வழக்குகள் தொடர்ந்து குவிந்து வந்ததால் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.