சென்னை:கரோனா தடுப்பு முன்கள பணியாளருக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசியை செலுத்தும் பணி 30 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. கிட்டத்தட்ட1.50 லட்சம் நபர்கள் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த மாதத்திற்குள் 55,000 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதே இலக்காக இருந்தது. ஆனால், 20 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. 10 லட்சம் டோஸ் தடுப்பூசி தயாராக உள்ளது. 47 மைதானங்களில் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களை அதிகரிப்போம்.