தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை அமலாக்க கோட்டத்தின் மத்திய சென்னை, சென்னை வடக்கு, சென்னை தெற்கு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மீன் கோட்டங்களில் அமலாக்க அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட மறைமலைநகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது 9 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 10 லட்சத்து ஆயிரத்து 366 ரூபாய் மின்வாரியத்திற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். இந்த இழப்பீட்டுத் தொகை மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.