சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாமல் சென்னையிலிருந்து கொச்சி, ராஜமுந்திரி, கடப்பா, கவுகாத்தி, விஜயவாடா, விசாகப்பட்டினம், மைசூரு ஆகிய ஏழு விமானங்கள், அந்தமான் செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ், ஹைதராபாத், கொல்கத்தா செல்லும் ஏர்ஏசியா விமானங்கள் என்று மொத்தம் 10 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இவைகள் தவிர சென்னையிலிருந்து டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, புவனேஸ்வர், திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு 26 விமானங்கள் குறைந்த பயணிகளுடன் இயக்கப்படுகின்றன. அதேபோல் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து 26 விமானங்கள் சென்னை வருகின்றன.