பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று (ஜூலை 19) வெளியிட்டார்.
தொடர்ந்து, உயர்கல்வியில் சேர்வதற்கு ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பொறுத்தவரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி பெற்றதாகவே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மேலும், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகின்றன.
இதையும் படிங்க: தொழிற் கல்வி படிப்புகளின் கட்-ஆப் அதிகரிக்க வாய்ப்பு!