தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மறுகூட்டல் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு!

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதியை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அறிவிப்பு
அறிவிப்பு

By

Published : Jun 21, 2022, 4:52 PM IST

சென்னை:அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா இன்று (ஜூன் 21) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "10,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 24ஆம் தேதி காலை 11 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

தனித்தேர்வர்களுக்கும் 24ஆம் தேதி காலை 11 மணி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வு எழுதிய பள்ளிகள் வாயிலாகவோ அல்லது www.dge.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாகவோ பெறலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு நாளை(ஜூன் 22) முதல் 29ஆம் தேதி வரை தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

12ஆம் வகுப்பு மாணவர்கள், விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் நாளை முதல் 29ஆம் தேதி வரை பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணத்தை மாணவர்கள் செலுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேன்கூட்டை அலட்சியம் செய்த அரசுப்பள்ளி நிர்வாகம் ...தேனீக்கள் கடித்து 31 மாணவர்கள் அவதி!

ABOUT THE AUTHOR

...view details