தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சைவ பயிற்சி சான்றிதழ் படிப்பு! - இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சைவ பயிற்சி சான்றிதழ் படிப்பு

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஓராண்டு சைவ பயிற்சி சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட உள்ளது.

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

By

Published : Nov 30, 2021, 2:44 PM IST

சென்னை:இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது, சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள், இதற்காக இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஓராண்டு சைவ பயிற்சி சான்றிதழ் படிப்பு தொடங்கப்படவுள்ளது. இதற்காக தற்போது விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு

  • விண்ணப்பிக்கும் நபர் இந்துக்களாக இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இந்து சைவ கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.
  • பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கி பயில வேண்டும்.
  • பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவருக்கு இலவச உணவு, சீருடை, உறைவிடம், பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.3,000 /- உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும்.

இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்ப படிவங்களை திருக்கோயில் இணையதளத்தில் www.maduraimeenakshi.org பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தை 1 தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பு வெளியாகுமா?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details