நிமோனியா நோய் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு 15 விழுக்காடு இறப்பு ஏற்படுகிறது. இந்திய அளவில் 1.2 மில்லியன் குழந்தைகள் தங்களது ஐந்தாவது வயதிற்குள் இறக்கின்றனர்.
நிமோனியா நோய்க்கு தடுப்பு மருந்தாக ’நிமோகாக்கல் காஞ்சுகேட்’ என்னும் தடுப்பூசி மருந்து பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிமோனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் ‘நியூமோகாக்கல்’ தடுப்பூசி, அரசு மருத்துவமனைகளில் போடப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தேசிய தடுப்பூசி அட்டவணையில், ‘நியூமோகாக்கல்’ தடுப்பூசியும் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிறந்த குழந்தைகளுக்கு ஒன்றரை மாதம், மூன்றரை மாதம் மற்றும் ஒன்பது மாதங்கள் என மூன்று தவணையாக நியூமோகாக்கல் தடுப்பூசி இலவசமாக போடும் திட்டத்தைச் சுகாதாரத் துறை அமைச்சர் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.