தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மும்பை - சென்னை வந்தடைந்த ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள்! - VACCINE ARRIVED IN CHENNAI FROM MUMBAI

சென்னை: மும்பையில் உள்ள மத்திய மருந்து தொகுப்புக் கிடங்கிலிருந்து ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை இன்று (மே.19) தமிழ்நாட்டிற்கு வந்தடைந்தன/

மும்பையிலிருந்து ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தது!!
மும்பையிலிருந்து ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தது!!

By

Published : May 19, 2021, 3:01 PM IST

தமிழ்நாட்டில் பரவி வரும் கரோனா வைரஸ் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த, பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடுவதை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால், மத்திய அரசு தேவையான அளவு தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாட்டிற்கு ஒதுக்காததால், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிலையில், அவற்றை மும்பையில் உள்ள மத்திய மருந்து தொகுப்புக் கிடங்கிலிருந்துஏற்றிக்கொண்டு, ஏர் இந்தியா விமானம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. இந்த ஒரு லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை அலுவலர்கள் சென்னை பழைய விமான நிலையத்தில் பெற்றுக்கொண்டனா்.


பின்னர், வாகனத்தில் ஏற்றப்பட்டு அவை தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் உள்ள மருந்து பாதுகாப்பு வைப்பு அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்தத் தடுப்பூசி மருந்துகள் தமிழ்நாட்டின் சில பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

இதையும் படிங்க: நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்போம் - விழிப்புணர்வு காணொலி வெளியிட்ட முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details