பொறியியல் படிப்பிற்கு மாணவர்கள் மத்தியில் எப்போதும் அதிக ஈர்ப்பு உண்டு. 12ஆம் வகுப்பு முடிந்து இன்ஜினியராகும் கனவுடன் பல மாணவர்கள் வெளிவருகின்றனர். தற்போது பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பிக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பொறியியல் படிப்பிற்கு 1,00,618 மாணவர்கள் விண்ணப்பம் - பொறியியல் மாணவர்கள்
சென்னை: பி.இ, பி.டெக் படிப்பிற்கு இதுவரை 1,00,618 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என தொழில்நுட்பக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.
பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு கடந்த 2ஆம் தேதி துவங்கி 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொழில் நுட்பக் கல்வித்துறையின் மூலம் நடத்தப்படும் பி.இ,பி.டெக். சேர்க்கைக்குரிய கலந்தாய்விற்கான இணையதள பதிவு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. 16ஆம் தேதி மதியம் 5 மணி வரையில் 1,00,618 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை உரிய காலத்தில் இணையத்தில் பதிவு செய்யலாம் என மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.