தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நேற்று (நவ.11) முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழ்நாடு அறிவித்தது. இதையடுத்து, இன்று (நவ.12) நண்பகல் 12.00 மணி நிலவரப்படி, 863 பேருந்துகளும், 57 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (எஸ்.இ.டி.சி.) தெரிவித்துள்ளது.
இன்று மதியம் 12.00 மணி வரையில், ஒட்டுமொத்தமாக மூன்றாயிரத்து 172 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு லட்சத்து, 33 ஆயிரத்து 795 பேர் பயணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை 84 பேர் பேருந்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளதாகவும் போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.