கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பயணிகள் விமானச் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து மருத்துவப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் எடுத்துவர பன்னாட்டு சரக்கு விமானங்கள் தற்போது இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அன்னவரம் என்ற ஊரில் உள்ள ஒருவருக்கு எட்டு பார்சல்கள் வந்தன. இவற்றை விமான நிலைய சுங்க இலாகா அலுவலர்கள் சோதனை செய்தபோது சுத்தப்படுத்தும் வேக்கம் கிளீனர், தூங்குவதற்குப் பயன்படும் டெண்ட்கள் இருந்துள்ளன.
இவற்றின் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அலுவலர்கள் அந்தப் பார்சல்களைப் பிரித்து பார்த்தபோது அதில் உயர் ரக கஞ்சா பவுடர் உருண்டைகள் மறைத்துவைத்து கடத்திவந்ததைக் கண்டுபிடித்தனர்.
ஒரு கிலோ 700 கிராம் கஞ்சா பின்னர் ரூ.9 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல்செய்தனர். ஆந்திராவிலிருந்த முகவரியும் போலியானது எனத் தெரியவந்தது. இது குறித்து சுங்க இலாகா அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உலகமே கரோனா வைரஸ் பீதியில் உள்ள நிலையில் கடத்தல் கும்பல் போதைப்பொருளைக் கடத்துவதில் கைவரிசை காட்டியிருப்பது விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தனி விமானம் மூலம் கரோனா பரிசோதனைக்கு வந்த மத்தியப்பிரதேச மாதிரிகள்!