ஷார்ஜா, சிங்கப்பூர் நாடுகளிலிருந்து விமானங்கள் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருவாரூரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் பஷீர் அகமது (56), சென்னையைச் சேர்ந்த அப்துல் பக்ரி (27) ஆகிய இரண்டு பயணிகளின் மீது சந்தேகம் எழுந்ததையடுத்து, அலுவலர்கள் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விமான நிலையத்தில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல்!
சென்னை: ஷார்ஜா, சிங்கப்பூர் நாடுகளிலிருந்து விமானங்களில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புடைய 1.5 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.
1.5kg gold seized
அப்போது ஷார்ஜாவிலிருந்து கடத்திவந்த தங்கத்தை தான் பயணம் செய்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு கீழே இறங்கிவந்த பயணியை ரகசியகண்காணிப்புக் கேமரா உதவியுடன் கண்டுபிடித்தனர்.இதேபோல் சிங்கப்பூரிலிருந்து வந்த பயணியிடம் சோதனை மேற்கொண்டனர். இதில் இருவரிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 1.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.