தமிழ்நாடு முழவதும் கடந்த எட்டு ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளின் நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், "தமிழ்நாட்டில் 2011-16 வரை 14,063 வீடுகளும், 2016-2019 வரை 10,284 வீடுகளும் வீட்டுவசதி வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் எட்டு ஆண்டுகளில் 24,347 வீடுகள் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ளன.
குடிசைமாற்று வாரியம் மூலம் 1.55 லட்சம் வீடுகள்..! - ஓ. பன்னீர்செல்வம் - 1.55 lakh houses
சென்னை: குடிசைமாற்று வாரியம் மூலம் ரூ.7,627 கோடி மதிப்பில் 1.55 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
deputy chief minister
அதேபோல் குடிசைமாற்று வாரியம் மூலம் 1970 முதல் 2011 வரை ஒரு லட்சத்து 11 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு குடிசைமாற்று வாரியம் மூலம் 7,627 கோடி ரூபாயில் ஒரு லட்சத்து 55 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்ததுபோல 2023ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும்" என்றார்.