சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த மணி என்பவரின் குடோனுக்கு நேற்று இரண்டு மினி வேன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மூலம் குட்கா பொருள்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்னையில் ஒன்றரை டன் 'குட்கா' பறிமுதல்! - சென்னை ராயப்பேட்டையில் 1.5 டன் மதிப்பிலான குட்கா பொருள் பறிமுதல்
சென்னை: ராயப்பேட்டைக்கு கொண்டுவரப்பட்ட 1.5 டன் மதிப்புள்ள குட்கா பொருள்களை மயிலாப்பூர் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைதனவர்கள்
இது குறித்து, தகவலறிந்த சென்ற மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான சிறப்பு படையினர் குட்கா ஏற்றிவந்த வாகனங்களை மடக்கி பிடித்தனர். அதிலிருந்து 1.5 டன் மதிப்புள்ள குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் குட்கா கடத்திவரப்பட்ட வாகனங்களை ஓட்டி வந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திர சிங், தர்மேந்திர குமார் சிங், குடோன் உரிமையாளர் மணி உள்ளிட்டோரை கைது செய்தனர். அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.