சென்னை: கொளத்தூரைச் சேர்ந்த விக்டர் டேனியல் காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது மனைவி காணிக்கம்(78) என்பவருக்கு சொந்தமாக 2400 சதுரடி கொண்ட காலிமனை கொளத்தூர், மாங்காளி நீதிமான் நகரில் உள்ளது. இந்த நிலம் ஆள்மாறாட்டம் செய்து அபகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நில அபகரிப்பு மோசடி தடுப்பு பிரிவில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், காணிக்கம் பெயரில் கிரையம் செய்த சொத்தின் ஆவணத்தை போல் ஒரு போலி ஆவணம் தயார் செய்து, ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.