தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் 1.26 கிலோ தங்கம் பறிமுதல் - 8 பேர் கைது - சென்னை விமானநிலையம்

சென்னை: துபாயிலிருந்து சூட்கேஸ் கைப்பிடி, உள்ளாடைகளில் மறைத்து வைத்துக் கடத்தி வந்த 1.26  தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

gold recovered
gold recovered

By

Published : Dec 15, 2020, 6:28 PM IST

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (டிசம்பர்-15) துபாயிலிருந்து சென்னை வந்த இரண்டு விமானங்களில் சுங்க இலாகா அலுவலர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த சென்னை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 8 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அதில், டிராலி வகை சூட்கேஸ் கைப்பிடிகள் மற்றும் உள்ளாடைகளில் மறைத்து வைத்துக் கடத்தி வந்த தங்கக்கட்டிகள், தங்க பேஸ்ட்களை கைப்பற்றினர்.

மொத்தம் 8 பேரிடம் இருந்து ரூ. 63 லட்சத்து 47ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 26 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details