சென்னை:தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறைச் சட்டம், ஒழுங்குமுறை விதிகள், உரிம நிபந்தனைகள்படி, அதிகாலை 1 மணி முதல் காலை 9 மணி வரை எந்தக் காட்சியும் திரையிடக் கூடாது.
இதை மீறி திரையரங்குகளில் சிறப்புக்காட்சிகளை காலை 9 மணிக்கு முன்பாக திரையிடுவதாகவும், அந்தக் காட்சிகளுக்கு அதிக கட்டணம் வசூலித்து, பொதுமக்கள் பணத்தை கொள்ளையடிப்பதுடன் வரி ஏய்ப்பும் செய்வதால் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றும்; இதுசம்பந்தமாக தமிழ்நாடு உள்துறைச்செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, இந்த சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும், சட்டம், விதி மற்றும் உரிம நிபந்தனைகளை மீறி படங்கள் திரையிடப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த விக்னேஷ் கிருஷ்ணா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.