தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரீட்சை எழுத மட்டும் பள்ளிக்கூடம் வாங்க!-பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்பு - பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார்

தமிழ்நாட்டில் 1-9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், தேர்வு நடைபெறும் நாளில் அரை நாள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

பரீட்சை எழுத மட்டும் பள்ளிக்கூடம் வாங்க!-பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்தார்.
பரீட்சை எழுத மட்டும் பள்ளிக்கூடம் வாங்க!-பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்தார்.

By

Published : May 5, 2022, 11:24 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வு நடைபெறும் நாள் அன்று அரை நாள் மட்டும் பள்ளிக்கு வருகை புரிந்தால் போதும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கு ஆண்டு பொதுத் தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமானதால் மாணவரின் நலன் கருதியும் பொதுத் தேர்விற்கு மாணவர்கள் தயாராவதற்கு ஏதுவாக இனிவரும் நாட்களில் ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு அரை நாட்கள் வருகை புரிந்தால் போதுமானது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவித்தபடி அந்தந்த மாவட்டங்களில் ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும் - தேர்வுத்துறை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details