சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே செங்கல்பட்டு மறைமலை நகரில் ஃபோர்ட் தொழிற்சாலை 25 வருடங்களுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி புரிந்து வந்தனர். தொடர்ந்து கார் தயாரிப்பு குறைந்ததால் தொழிற்சாலையை மூடும் முடிவுக்கு வந்த நிர்வாகம், ஜூலை மாதம் பணியை நிறுத்தியது. அதன்பின் ஆகஸ்ட் மாதம் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணியும் நிறுத்தப்பட்டது.
இதனிடையே தொழிற்சாலையை மூடக்கூடாது என்றும், தங்களுக்கு பணிப் பாதுகாப்பு வேண்டும் என்றும் அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் போராட்டங்கள் நடத்தினர். இறுதி தீர்வுத் தொகையை (பைனல் செட்டில்மெண்ட்) குறித்து தொழிலாளர் சங்கங்கள் நிர்வாகத்துடனும் அரசுடனும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தன்னிச்சையாக இறுதித் தீர்வுத்தொகையை நிர்வாகம் அறிவித்துள்ளது.