தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அழுகிய நிலையில் பெண் இறப்பு - பொதுமக்கள் சாலை மறியல் - செங்கல்பட்டு மாவட்ட குற்றச் செய்திகள்

செங்கல்பட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பெண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல் துறை நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நீதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
நீதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

By

Published : Mar 5, 2022, 12:16 PM IST

செங்கல்பட்டு: அச்சிருப்பாக்கம் அடுத்த இந்தலூரைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி வைத்தீஸ்வரி. இவர், சந்தேகத்திற்கு இடமான முறையில் வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக நேற்றைய முன்தினம் (மார்ச் 03) மீட்கப்பட்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வைத்தீஸ்வரியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், உரிய நீதி வேண்டும் எனக் கோரி, ஊர்மக்களும், வைத்தீஸ்வரியின் உறவினர்களும் இன்று (மார்ச் 05) அச்சிருப்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம் - போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details