தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் பிரதிநிதிகளின் உறவினர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

உள்ளாட்சி அமைப்பு பெண் பிரதிநிதிகளின் உறவினர்கள் நிர்வாகத்தில் தலையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் எச்சரித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்

By

Published : Mar 25, 2022, 7:35 PM IST

செங்கல்பட்டு: உள்ளாட்சி அமைப்பு பதவிகளில் பெண்களுக்கென குறிப்பிட்ட விழுக்காடு ஒதுக்கப்பட்டு வருகிறது. பெண்களும் நிர்வாகத்தில் பங்கு பெற வேண்டும் என்பதற்காக இந்த ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் நடைமுறையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக, அவர்களது கணவர், சகோதரர், உறவினர்கள் ஆகியோர் தான் நிர்வாகத்தைக் கவனிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது பெண்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது என்பதனால் பெண் பிரதிநிதிகளின் கணவர், சகோதரர், உறவினர்கள் ஆகியோர் நிர்வாகத்தில் தலையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் எச்சரித்துள்ளார்.

மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகள் மற்றும் வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பெண் பிரதிநிதிகளுக்கும் இது பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் குழுக் கூட்டங்களில், பெண் பிரதிநிதிகளின் உறவினர்கள் கலந்து கொண்டது நிரூபணமானால், அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க:அம்பேத்கர் பிறந்த நாளில் தேசிய விடுமுறை- திருமாவளவன் எம்.பி., கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details