செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் 17வயது சிறுமி, தனது தங்கையுடன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் சிறுமி மூன்று நபர்களின் பெயரைக்குறிப்பிட்டு சொல்லியுள்ளார். சிறுமி பேசிய வீடியோவில், "முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு வணக்கம். எங்களுக்கு வீட்டை விட்டு வெளியில் வரவே பயமாக இருக்கு. வெளியில் வந்தாலே, எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறோம். எப்படி வரலாம். தூங்கும்போது வீட்டைக் கொளுத்திவிடுவோம்" என்று மிரட்டுவதாகக் கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர், சிறுமி யார் மீது புகார் கூறினாரோ அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்திலும் வழக்குப் பதிந்துள்ளனர்.
மேலும், சிறுமியின் குடும்பத்திற்கும் அதே பகுதியில் வசிக்கும் சிறுமி புகார் கூறியவரின் குடும்பத்திற்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமி புகார் தொடர்பாக மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த 39 மீனவர்களை 'சுத்துப்போட்ட' இடிந்தகரை மீனவர்கள் -நடந்தது என்ன?