செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தச்சூரில், சில மாதங்களுக்கு முன்னதாக, புதிதாக கல்குவாரி ஒன்று திறக்கப்பட்டது. அதிமுகவின் முக்கியப் பிரமுகர் ஒருவரின் குவாரி இது என்று கூறப்படுகிறது.
இந்தக் கல்குவாரிக்கு குன்னத்தூர், சீர்வாடி, நீலமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். குவாரிக்கு வரும் லாரிகளை மறித்தும், சாலையில் மின் கம்பங்களைப் போட்டும் போராட்டம் நடைபெற்றது.