தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு அரசைக் கண்டித்து ஏகனாபுரம் மக்கள் மொட்டை அடித்துப் போராட்டம்! - செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு அருகே சர்வதேச இரண்டாவது விமான நிலையம் தங்கள் பகுதியில் அமைய எதிர்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் மக்கள் மொட்டை அடித்து, யாசகம் பெற்று, ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 16, 2023, 4:32 PM IST

விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு:தமிழ்நாட்டில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதை விரிவாக்கம் செய்வதற்குண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தினால், 2ஆவது சர்வதேச புதிய விமான நிலையம் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நான்கு இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

அதில், காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த ஏகனாபுரம் கிராமத்தை மையப்பகுதியாக வைத்து சர்வதேச புதிய விமான நிலையம் அமைக்க, அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய், மகாதேவிமங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்த திட்டமிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

அதனால், அந்த கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் இந்த கிராமத்தில் உள்ள வசதி போல மாற்று இடம் அளித்தாலும் தங்களுக்கு அமையாது எனக் கூறியும் மறுப்புத் தெரிவித்து போராடுகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும், நிலப் பகுதிகளையும் எடுப்பதை தவிர்த்து விட்டு, தமிழ்நாடு அரசு வேறு பகுதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களும் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனர். விமான நிலையம் வருவதை ஏற்றுக்கொள்ள மறுத்து ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 264ஆவது நாளாக இரவு நேர அற வழிப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏகனாபுரம் ஊராட்சி, பரந்தூர் ஊராட்சி, தண்டலம் ஊராட்சி உள்ளிட்ட 3 ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராம மக்கள் என அனைவரும் சேர்ந்து, விமான நிலைய திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனக் கூறி, ஏகனாபுரம் பகுதியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் ஐந்தாவது முறையாக ஒருமனதாக முடிவு எடுத்து தீர்மானப் புத்தகத்தில் கையொப்பம் இட்டனர்.

இந்நிலையில் ஏகனாபுரம் கிராம மக்கள், எந்த விதமான முன்னறிவிப்போ அரசாணையோ வெளியிடப்படாத போதும், அமைச்சர் கேகேஎஸ்எஸ் ராமசந்திரன் சட்டப்பேரவையில் பேசியதைக் கண்டித்து, தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமல் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் மீனம்பாக்கம் புதிய விமான நிலைய விரிவாக்க தொடக்க நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மோடி அவர்களிடம், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பரந்தூர் விமான நிலையம் செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை விடுத்திருந்தார்.

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 264 நாட்களாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த கோரிக்கையைக் கண்டித்தும், எந்தவித அரசு ஆணையினை வெளியிடாமலும் தமிழ்நாடு அரசு செயல்படும் விதத்தைக் கண்டித்தும், 264ஆவது நாளாக, இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் அம்பேத்கர் சிலை முன்பு சுமார் 350க்கும் மேற்பட்டவர்கள் மொட்டை அடித்து, திருவோடு ஏந்தி போராடினர். பெண்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டமும் நடைபெற்று வருகின்றது.

இதையும் படிங்க:அளவுக்கு மீறி மணல் அள்ளப்படுவதாக மேலப்பெரும்பள்ளம் கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details