செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த தையூரில் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இணையும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் உதயநிதி உதிர்த்த சில சொற்கள் இதோ...
- நான் கருணாநிதியின் பேரன் கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டேன். கூடிய விரைவில் அதிமுகவிற்கு இரண்டு ஆப்புகள் உள்ளன.
- ஒன்று சசிகலா வெளியே வந்தவுடன் நடக்கும்.
- இன்னொன்று தேர்தலில் நீங்கள் திமுகவிற்கு அளிக்கப் போகும் வாக்கு.
- அதிமுக அரசின் மீது மக்களுக்குப் பெரிய அவநம்பிக்கை வந்துள்ளதாக, வரும் தேர்தலில் நிச்சயமாக திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் பதவி ஏற்பது உறுதி. ஏனென்றால் அரசு நடத்தக்கூடிய கிராமசபைக் கூட்டம் நடத்தாமல் விட்டதினால் ஸ்டாலின் ஒவ்வொரு கிராமமாக கிராமசபைக் கூட்டம் நடத்திவந்தார் .
- அடுத்து ஒவ்வொரு தொகுதியாகவும் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்கின்ற தலைப்பில் பரப்புரை செய்துவருவதால் மக்களின் பேராதரவு கிடைத்துள்ளது.