செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள கரசங்கால் பகுதியைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவரும் விழுப்புரம் மாவட்டம் சலாவதி கிராமத்தைச் சேர்ந்த மாரி (எ)நண்டு மாரியும் திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து லாரி மூலம் கள்ளச்சாராயம் கடத்தி விற்பனை செய்து வந்துள்ளனர்.
இவர்கள் கடந்த 15 தினங்களுக்கு முன்பு சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்புடைய கள்ளச்சாராயம் ஏற்றி வந்துள்ளனர். அப்போது ஒரத்தி அருகே செல்லும் போது, லாரியை மடக்கி காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர்.