செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு ஊராட்சிக்குட்பட்ட புதுப்பட்டு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக பல்வேறு தரப்பினருக்கும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதனால் ரங்கா என்ற முதியவர் மற்றும் 38 வயதுடைய இளைஞர் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் .
இப்போது ஒரு சிறுமி உள்பட 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்று பேர் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுவதாகவும் நீர் தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படவில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர். இந்தப் புகாரையடுத்து இன்று சூனாம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மருத்துவர்கள் செவிலியர்கள் சென்று சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர்.
மேலும் மருத்துவர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் தொட்டியில் சுத்தப்படுத்தவும் குடிநீர் பழுப்புகளை அகற்றிவிட்டு புதிதாக போடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்புக்கான மருந்துகள் இந்தியர்களுக்கே முதலில் கிடைக்க வேண்டும் - ராகுல் காந்தி