செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 53 பேர், தென் மாவட்டங்களில் உள்ள புனித தலங்களுக்கு தனியார் பேருந்து ஒன்றில் சுற்றுலா சென்றனர். சுற்றுலா முடிந்து அவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
இன்று மே 30 அதிகாலை 4 மணியளவில், பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை என்ற இடத்தில் வரும்போது நிலைதடுமாறியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.