தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நாளை (டிச.13) பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணிகளுக்கு இந்தத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 6 ஆயிரம் தேர்வர்கள் இதில் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, மாவட்டத்தில் ஆறு இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்ணிவாக்கத்திலுள்ள பெரி தொழில் நுட்பக் கல்லுாரி, கொளப்பாக்கத்திலுள்ள தாகூர் பொறியியல் கல்லுாரி, சின்னக் கொளப்பாக்கத்தில் கற்பக விநாயகா கல்லுாரி, வண்டலுார் கிரஸண்ட் பொறியியல் கல்லுாரி, காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லுாரி, அதே வளாகத்தில் உள்ள வள்ளியம்மை கல்லுாரி ஆகிய ஆறு மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.