தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 12, 2020, 6:22 PM IST

Updated : Oct 12, 2020, 9:14 PM IST

ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 5 ஆயிரத்திலிருந்து குறைந்த கரோனா பாதிப்பு!

TN corona cases now
கரோனா பாதிப்பு நிலவரம்

18:03 October 12

சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து 5 ஆயிரத்துக்கு மேல் இருந்து வந்த கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று (அக்டோபர் 12) 4879 என குறைந்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாட்டில் புதிதாக 78 ஆயிரத்து 440 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் மூலம் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழ்நாட்டிலிருந்து 4 ஆயிரத்து 876, கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு மூன்று நபர்கள் என 4 ஆயிரத்து 879 நபர்கள் புதியதாக கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை 81 லட்சத்து 63 ஆயிரத்து 27 நபர்களுக்கு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 6 லட்சத்து 61 ஆயிரத்து 264 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. 

இதையடுத்து நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களிள் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 43 ஆயிரத்து 747 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 ஆயிரத்து 165 நபர்கள் குணமடைந்து வீட்டுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 7 ஆயிரத்து 203 என உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 29, அரசு மருத்துமனையில் 33 என 62 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 314ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 13 ஆயிரத்து 756 நபர்கள் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

சென்னை - 1,83,251

செங்கல்பட்டு - 39,621

கோயம்புத்தூர் - 37,511

திருவள்ளூர் - 34,958

காஞ்சிபுரம் - 23,662

சேலம் - 23,650

கடலூர் - 21,793

மதுரை - 17,574

திருவண்ணாமலை - 16,674

வேலூர் - 16,403

தேனி - 15,691

விருதுநகர் - 14,872

ராணிப்பேட்டை - 14,186

தூத்துக்குடி - 14,181

கன்னியாகுமரி - 13,849

தஞ்சாவூர் - 13,864

திருநெல்வேலி - 13,573

விழுப்புரம் - 12,624

திருச்சிராப்பள்ளி - 11,435

திருப்பூர் - 10,219

புதுக்கோட்டை - 9,944

கள்ளக்குறிச்சி - 9,722

திண்டுக்கல் - 9,338

திருவாரூர் - 8,511

ஈரோடு - 8,426

தென்காசி - 7,630

நாமக்கல் - 7,281

நாகப்பட்டினம் - 5,900

ராமநாதபுரம் - 5,760

திருப்பத்தூர் - 5,783

சிவகங்கை - 5,524

கிருஷ்ணகிரி - 5,586

நீலகிரி - 5,512

தருமபுரி - 4,693

அரியலூர் - 4,129

கரூர் - 3,599

பெரம்பலூர்  - 2,000

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 925

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 982

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: முதலில் கிடைக்கும் கரோனா தடுப்பு மருந்து இதுதான்! 

Last Updated : Oct 12, 2020, 9:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details