செங்கல்பட்டு:திருப்பதியில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் பாசஞ்சர் ரயில் இன்று காலை மேல்மருவத்தூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் பாதையில் குறுக்கிட்ட இரு மயில்கள் பறந்து தப்பிக்க முயன்றன.
இதில் ஒரு மயில் தப்பித்து விட, மற்றொரு மயில் ரயில் என்ஜினின் கண்ணாடியில் அடிபட்டு உயிரிழந்தது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.