செங்கல்பட்டு அடுத்த செட்டிபுண்ணியம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அசோக் குமார், பிரகாஷ், மோகன் மூவரும் செல்பி வீடியோ மோகம் கொண்டவர்கள். குறிப்பாக, விதவிதமான செல்பி வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவந்துள்ளனர்.
அந்த வகையில் நேற்று (ஏப். 7) மாலை செட்டிபுண்ணியம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் நின்று மூவரும் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது சென்னையிலிருந்து செங்கல்பட்டு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் மோதி உடல் சிதறி உயிரிழந்தனர்.