செங்கல்பட்டு: திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பாமகவின் வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் இன்று (ஏப்.1) சாவடி, தேவனேரி மீனவர் பகுதி, மாமல்லபுரம் மீனவர் பகுதி, ஒத்தவாடை தெரு, பேருந்து நிலையம், அண்ணா நகர், மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார்.
பாமக வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தீவிர பரப்புரை! - Thiruporur PMK CANDIDATE Thirukachur Arumugam
திருப்போரூர் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் திருக்கச்சூர் ஆறுமுகம் மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
![பாமக வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தீவிர பரப்புரை! Thiruporur PMK CANDIDATE Thirukachur Arumugam ELECTION CAMPAIGN, திருப்போரூர் தொகுதி பாமக வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11241713-thumbnail-3x2-pmk.jpg)
பாமக வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தீவிர பரப்புரை
திருப்போரூர் பாமக வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தீவிர பரப்புரை
இதில் அதிமுக மாவட்ட துணைக் கழகச்செயலாளர் எஸ்வந்த்ராவ், புரட்சி பாரத கட்சி மாவட்ட தலைவர் ஓ.இ.சங்கர், அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராகவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும், வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்துடன் திறந்தவெளி வாகனத்தில் சென்று மாமல்லபுரம் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வாக்குச் சேகரித்தனர்.
இதையும் படிங்க:மேல்மருவத்தூரில் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு!