தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் மோதி காயமடைந்த 90 வயது முதியவருக்கு மதுராந்தகம் காவல் ஆய்வாளர் - மதுராந்தகம் மருத்துவமனையில் அனுமதி ஜானகிராமன்

கார் மோதி காயமடைந்த 90 வயது முதியவரை, மதுராந்தகம் காவல் ஆய்வாளர் தர்மலிங்கம் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்த வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

முதியவரை கையில் தூக்கிக்கொண்டு காப்பாற்றிய போலீசார்- வீடியோ வைரல்
முதியவரை கையில் தூக்கிக்கொண்டு காப்பாற்றிய போலீசார்- வீடியோ வைரல்

By

Published : Dec 23, 2022, 6:43 AM IST

முதியவரை கையில் தூக்கிக்கொண்டு காப்பாற்றிய போலீசார்- வீடியோ வைரல்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த இரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் . 90 வயது முதியவரான இவர், மதுராந்தகம் தாலுகா அலுவலகத்திற்கு, சொந்த வேலையாக நேற்று (டிசம்பர் 22) சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பிய ஜானகிராமன், சாலையை கடக்கும் போது, சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் மோதி பலத்த காயமடைந்தார்.

இதைகண்ட மதுராந்தகம் காவல் ஆய்வாளர் தர்மலிங்கம், முதியவரை தானே கையில் தூக்கிச் சென்று தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். முதலில் மதுராந்தகம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஜானகிராமன், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:சசிகலா புஷ்பா வீட்டை சூறையாடிய மர்ம நபர்கள்!

ABOUT THE AUTHOR

...view details