செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த பவுந்தங்கரணையைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு பாவனா (13) என்ற மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், சிறுமி பாவனா தனது தம்பியுடன் வீட்டுக்குப் பின்புறம் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.
பெற்றோர் இருவரும் நூறு நாள் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், குளத்தில் குளித்த சிறுமி மூழ்கியதாகத் தெரிகிறது. அக்காவை காணாத சிறுவன் அலறியதால், அக்கம்பக்கத்தினர் வந்து குளத்தில் மூழ்கிய சிறுமியை மீட்டு செய்யூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.