தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் தலையை வெட்டிச் சென்ற விவகாரம்: போலீஸ் விசாரணை .. - chengalpattu Police

செங்கல்பட்டில் மின்கம்பம் விழுந்து உயிரிழந்ததால் அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் தலையை மர்ம நபர்கள் வெட்டிச் சென்ற விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் தலையை வெட்டிச் சென்ற விவகாரம்: போலீஸ் விசாரணை முடுக்கம்..
அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் தலையை வெட்டிச் சென்ற விவகாரம்: போலீஸ் விசாரணை முடுக்கம்..

By

Published : Oct 28, 2022, 10:29 AM IST

செங்கல்பட்டு: மதுராந்தகம் அடுத்த சித்ரவாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் பாண்டியன் - நதியா தம்பதி. இவர்களின் மகள் கிருத்திகா கடந்த 5ஆம் தேதி அவுரிமேடு கிராமத்தில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்தார்.

அங்கு வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த கிருத்திகாவின் மீது மின் கம்பம் விழுந்ததில்,அவர் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 14ஆம் தேதி உயிரிழந்தார்.

இதனையடுத்து சிறுமி கிருத்திகாவின் உடல் அவரது சொந்த கிராமத்தில் 15ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே சம்பவத்தன்று குறிப்பிட்ட மின் கம்பத்தின் மீது ஒரு நபர் ஏறியதாகவும், சிதிலமடைந்திருந்த மின் கம்பம் அதனால்தான் சிறுமியின் மீது விழுந்தது என்றும் சிறுமியின் தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் குறிப்பிட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன் அடிப்படையில் புகாரரைப் பெற்றுக் கொண்ட சித்தாமூர் காவல்துறையினர், அந்த குறிப்பிட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொண்டதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வழக்கு பதியப்பட்ட நபரின் தரப்பினர், வழக்கை வாபஸ் பெறுமாறு சிறுமியின் குடும்பத்தினரை பகிரங்கமாக மிரட்டுவதாக புகார் எழுந்தது. இது குறித்தும் சிறுமியின் தரப்பினர் சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன், சிறுமி புதைக்கப்பட்ட இடம் சேதமடைந்திருப்பதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர். இதனையடுத்து மதுராந்தகம் பொறுப்பு டிஎஸ்பி துரைபாண்டியன், வட்டாட்சியர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் மீண்டும் தோண்டப்பட்டது.

அப்போது சிறுமியின் சடலத்திலிருந்து தலை மட்டும் துண்டிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், இதுதொடர்பான விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அதேநேரம் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் எலுமிச்சை பழம் மற்றும் குங்குமம் போன்றவை கிடந்ததாலும், அன்று அமாவாசை என்பதாலும் வீட்டின் தலைச்சன் பிள்ளையான கிருத்திகாவின் தலையை மாந்திரீக நம்பிக்கை உள்ளவர் எவரேனும் வெட்டிச் சென்றனரா எனவும், அல்லது வழக்கை திசை திருப்பவும் அல்லது கவனத்தைக் கவர்ந்து சம்பவத்தை பெரிதாக்கவும் யாராவது இப்படி செய்துள்ளனரா எனவும் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஆனால் காவல்துறையினரின் விசாரணையில், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வருவதாக தெரிகிறது.

இதையும் படிங்க:மின்கம்பம் விழுந்து சிறுமி உயிரிழப்பு.. ஊர் மக்கள் போராட்டம்..

ABOUT THE AUTHOR

...view details