செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலக உதவியாளர் முதல் வட்டாச்சியர் வரை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை முற்றிலுமாக நிரப்ப வேண்டும்.
பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்திரவாதம் செய்து உடனே தீர்வு காண வேண்டும், ஜாக்டோ - ஜியோ போராட்ட பாதிப்புகளை உடனே சரிசெய்திட வேண்டும்.
சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் குடும்ப பாதுகாப்பு நிதியிணை பத்து லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: காரில் வந்து வழிப்பறி செய்த மூன்று இளைஞர்களுக்கு தர்ம அடி!