தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிட்லபாக்கம் ஏரியில் குப்பைகள் கொட்டுவதற்குத் தடை - செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு: சிட்லபாக்கம் ஏரியில் குப்பைகள் கொட்டுவதற்குத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Stay for sitlapakkam lake as a dump yard, HC order
Stay for sitlapakkam lake as a dump yard, HC order

By

Published : Jun 13, 2020, 10:25 AM IST

செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் கிராம பஞ்சாயத்தில் உள்ள சிட்லபாக்கம் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், அதற்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும் மாடம்பாக்கத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், சிட்லபாக்கத்தைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு நீர் ஆதாரத்துக்கு முக்கியமான ஏரி எனவும், இங்கு டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், சில நேரங்களில் குப்பைகள் எரிக்கப்படுவதால் வெளியாகும் நச்சுவாயு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, ஏரியில் குப்பைகள் கொட்டுவதற்குத் தடைவிதித்ததோடு, மனுவுக்கு பதிலளிக்கும்படி சிட்லபாக்கம் கிராம பஞ்சாயத்து சிறப்பு அலுவலருக்கு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தது.

ABOUT THE AUTHOR

...view details