செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில், எஸ்.ஆர்.எம். மருத்துவமனை உள்ளது. இங்கு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இந்து(27) என்ற பெண் பல் மருத்தவராக பணியாற்றி வந்தார். இவர் பொத்தேரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை இவர் தங்கியிருந்த விடுதியில், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர், உயிரிழந்த மருத்துவர் இந்துவின் சடலத்தைக் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
