செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள ஈசூர் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ அலர்மேல்மங்கை நாயகி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
இதேபோல், கடந்த மூன்றாம் தேதி மாலை சங்கல்பம் விக்னேஸ்வரா ஆராதனை, மகா பூர்ணாஹுதி சிறப்பு ஹோமம் மூன்று நாள்களுக்கு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் யாக சாலையிலிருந்து வேதங்கள் முழங்க புனித நீர் கொண்டு செல்லப்பட்டு கோயில் கோபுர கலசத்தில் ஊற்றினர்.
பின்னர் அங்கிருந்த பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தில் வள்ளிபுரம், மதுராந்தகம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த கோயில் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'தொட்டில் குழந்தைத் திட்டம் முடக்கமே பெண் சிசுக் கொலைகளுக்கு காரணம்'- ஹென்றி திபேன் குற்றச்சாட்டு