தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் - சிறப்பு மருத்துவ முகாம் - etv bharat

கேளம்பாக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

சிறப்பு மருத்துவ முகாம்
சிறப்பு மருத்துவ முகாம்

By

Published : Aug 7, 2021, 4:46 PM IST

செங்கல்பட்டு: கேளம்பாக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன் தலைமையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமினை முன்னாள் திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மன் தொடங்கி வைத்தார். மருத்துவ முகாமில் ஏழை எளிய மக்களுக்கு உடல் நிலைக்கு தகுந்தவாறு அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

மேலும் அவர்களுக்கு முதலுதவி பெட்டகமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சேகர், மாவட்ட துணை செயலாளர் அன்புச் செழியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:அண்ணாமலைக்கு பயப்பட தேவை இல்லை - அமைச்சர் கே.என்.நேரு

ABOUT THE AUTHOR

...view details