தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி: சென்னையிலிருந்து 16,888 சிறப்புப்பேருந்துகள் இயக்கம் - தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்

தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து மாநிலம் முழுவதும் மொத்தம் 16,888 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 22, 2022, 6:53 AM IST

தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல போக்குவரத்துத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 16,888 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சேவை நேற்று (அக்.21) தொடங்கியது அக். 23ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. இன்று (அக். 22) மட்டும் 1,500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்கள் எளிதில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லவும் ஏதுவாக சென்னையில் 5 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக, சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தில் சானிடோரியம், தாம்பரம் ரயில் நிலையம் என 2 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலை, பேளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி செல்லும் பேருந்துகளும், திண்டிவனம் வழியாக பண்ருட்டி நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதனால், அங்கு ஏராளமான பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன. அதிகளவில் பயணிகள் கூட்டம் சொந்த ஊர்களுக்கு செல்வதால் தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் சீர் செய்து வருகின்றனர்.

இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்கள் என்பதால் பொதுமக்கள் கூட்டம் இன்னும் அதிகரித்து தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கூடுதலான போக்குவரத்து போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டுமென பயணிகள் கோரிக்க வைத்துள்ளனர். அதற்கேற்றார் போல், வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையை தவிர்த்து கிழக்கு கடற்கரை சாலை திருப்போரூர் சாலைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளியையொட்டி, தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம்..
இதையும் படிங்க:மாசற்ற தீபாவளியைக் கொண்டாட வேண்டும் - சென்னை மாநகராட்சி

ABOUT THE AUTHOR

...view details