தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கல்பட்டு அருகே கோர விபத்து: 6 பேர் பலி; 6 பேர் படுகாயம்! - மதுராந்தகம் விபத்து

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு டாடா ஏஸ் வாகனத்தில் சென்ற 6 பேர் வீடு திரும்பியபோது மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலைக்கு சென்று திரும்பியபோது விபத்து
திருவண்ணாமலைக்கு சென்று திரும்பியபோது விபத்து

By

Published : Dec 7, 2022, 8:21 AM IST

Updated : Dec 7, 2022, 9:00 AM IST

செங்கல்பட்டு: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஞானாம்பிகை தெரு பகுதியை சேர்ந்த 10 பேர், கார்த்திகை தீபத் திருநாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு டாடா ஏஸ் வாகனத்தில் நேற்று (டிச. 6) சென்றனர். தரிசனம் முடித்துவிட்டு இன்று (டிச. 7) அதிகாலை அவர்கள் அதே வாகனத்தில் வீடு திரும்பினர்.

சுமார் நான்கு மணி அளவில் மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் அருகே டாடா ஏஸ் வாகனம், சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. அதே நேரத்தில் பின்னால் வேகமாக வந்த மற்றொரு வாகனம், டாடா ஏஸ் வாகனத்தின் மீது மோதியது. இரண்டு வாகனங்கள் இடையே சிக்கிய டாடா ஏஸ் வாகனம் முழுவதும் சேதமானது.

இந்த விபத்தில் பொழிச்சலூரை சேர்ந்த சந்திரசேகர் (70), சசிகுமார் (35), தாமோதரன் (28), ஏழுமலை (65), கோகுல் (33), சேகர் (55) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (27), சேகர் (37), அய்யனார் (35), ரவி (26) உட்பட ஆறு பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற மதுராந்தகம் போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பெண்ணுடன் தகாத உறவை முறிக்க மறுப்பு - இளைஞர் கல்லால் அடித்துக்கொலை

Last Updated : Dec 7, 2022, 9:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details