நாடு முழுவதும் பந்த் அறிவித்தால்கூட மக்கள் நடமாட்டம் சாலையில் இருக்கத்தான் செய்யும். சில கடைகள் திறந்திருக்கும், வாகனங்கள் சாலைகளில் பறந்துகொண்டுதான் இருக்கும். ஆனால், இந்தக் கரோனா வைரஸ் அச்சத்தால் மத்திய அரசு அறிவித்த சுய ஊரடங்கை முன்னிட்டு மக்கள் நடமாட்டமே கண்களில் தென்படாத சூழ்நிலை உருவானது.
சென்னை டூ திருச்சி, திருச்சி டூ சென்னை ஆகிய இரு தேசிய நெடுஞ்சாலைகளும் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்தத் தாக்கம் நகர்ப்புறம் மட்டும் இல்லாமல் கிராமப்புறங்களிலும் அதிகமாகக் காணப்பட்டது.