சென்னை(LiquorBased News):செங்கல்பட்டு மதுவிலக்கு அமலாக்கத் துறையின் மத்தியப் புலனாய்வு நுண்ணறிவு பிரிவுக்கு, கல்பாக்கம் அருகே போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுவதாகத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நுண்ணறிவுப் பிரிவினர், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் அனுபுரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் அங்கு இயங்கிவந்த போலி மதுபானத் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மணிகண்டன், ஜெயலட்சுமி ஆகியோரைக் கைது செய்த அமலாக்கப் பிரிவினர், அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பூந்தண்டலம் பகுதியில் செயல்பட்டு வந்த போலி மதுபானத் தொழிற்சாலையையும் சீல் வைத்தனர்.
பறிமுதல்